பிரபல நடிகர் மோகன் ராமனின் மகள் வித்யுல்லேகா ராமன். இவர் ஜீவா, சமந்தா நடிப்பில் உருவான நீதானே என் பொன்வசந்தம் என்ற படத்தில் அறிமுகமானார். இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார்.
அதன்பின்பு வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, காக்கி சட்டை, பவர் பாண்டி, வீரம் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார், இதனிடையே, நடிகை வித்யுல்லேகா ராமன் கடின உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்துள்ளார்.
தற்போது ஆறு மாதத்திற்கு முன்பு அவர் எடுத்திருந்த புகைப்படத்தையும் தற்போது இருக்கும் புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து நான் உடல் எடையை குறைத்து விட்டேன் என்று இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். வித்யுல்லேகா ராமன் உடல் எடையைக் குறைத்தது எவ்வாறு என்று ரசிகர்கள் அவரிடம் டிப்ஸ் கேட்டு வருகிறார்கள்.