தமிழ் சினிமா செய்திகள்

6.5 லட்சம் ரூபாய் செலவில் சூர்யாவுக்கு பிரம்மாண்ட கட்-அவுட் கலக்கும் சூர்யா ரசிகர்கள்!

சூர்யா ரசிகர்கள் சூர்யாவுக்கு உலகிலேயே மிகப் பெரிய கட்-அவுட் ஒன்றை திருத்தணியில் வைக்க முடிவு செய்துள்ளார்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்துமே தமிழகம் கேரளா கர்நாடகா ஆந்திரா என உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்ப்பார்கள்.

இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என் ஜி கே படம் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி முதல் முறையாக நடிக்கிறார்.

இசை யுவன் சங்கர் ராஜா. என் ஜி கே படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு தயாரிக்கிறார்கள். என் ஜி கே படம் வருகின்ற மே மாதம் 31ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியாகிறது.

இந்நிலையில், என் ஜி கே படத்தின் புரமோஷனுக்காக சூர்யா ரசிகர்கள் ஒரு கட்-அவுட் ஒன்றை வைக்க உள்ளார்கள். அந்த கட்-அவுட் உலகிலேயே மிகப் பெரிய கட்-அவுட் என்ற பெருமையை பெறுகிறது. ஆம் அந்த கட்-அவுட் சுமார் 215 அடி உயரம் கொண்டதாக தயாராகி வருகிறது.

இந்த கட்-அவுட் திருத்தணியில் வைக்க சூர்யா ரசிகர்கள் முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்து வருகிறார்கள். இந்த கட்-அவுட் வைக்க சுமார் 6.5 லட்சம் செலவு செய்துள்ளதாக தெரிகிறது.

சூர்யாவின் இந்த ஆள் உயர கட்-அவுட் இன்னும் இரண்டு நாட்களில் வைத்துவிட சூர்யா ரசிகர்கள் மிகத் தீவிரமாக வேலைகளை செய்து வருகிறார்கள்.

தற்போது அந்த கட்-அவுட் நாம் பார்ப்போம்

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.