வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. தற்போது எப்.ஐ.ஆர் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணுவிஷால்.
இந்நிலையில், தனது தந்தையின் பிறந்த நாளை எளிமையாக தனது வீட்டிலேயே கொண்டாடி இருக்கிறார் விஷ்ணுவிஷால். மேலும் தனது முதல் ஹீரோ, தனது முதல் டீச்சர், தனது முதல் நண்பர் என எல்லாம் என் தந்தை என்று புகழாரம் சூட்டியுள்ளார் விஷ்ணு விஷால்.
இதனிடையே தந்தையின் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஷ்ணுவிஷால்.
My first love
My first hero
My first friend
My first teacher
HAPPY BIRTHDAY PA???? pic.twitter.com/QE6wNg05Wc— VISHNU VISHAL – stay home stay safe (@TheVishnuVishal) June 9, 2020