நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படமான துக்ளக் தர்பார் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது இதில் படக்குழுவை சேர்ந்த முக்கியமான நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கு பெற்றார்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் தொடர்ந்து புதுமையான கதைகளை கொண்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் துக்ளக் தர்பார் என்ற படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அதில் ஒருவர் அதிதிராவ், மற்றொருவர் காயத்திரி நடிக்கிறார். துக்ளக் தர்பார் படத்தினை மிக பிரம்மாண்டமாக 7 ஸ்டூடியோ மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.