தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தனது படங்களில் பணியாற்றும் நடிகர்களுக்கு அன்பாக கோல்ட் காயின் வழங்குவார். அதேபோல விஜய் சேதுபதி தனது படங்களில் தன்னுடன் பணியாற்றும் நபர்களுக்கு ஆசையாக அன்பாக முத்தம் கொடுப்பார்.
தற்போது, இந்த நிகழ்வு மாஸ்டர் படப்பிடிப்பில் நிகழ்ந்துள்ளது. தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பு முடிவடைந்த கடைசி நாளான அன்று தளபதி விஜய், விஜய் சேதுபதியிடம் எனக்கு ஆசையாக முத்தம் கொடுங்கள் என்று கேட்டார். அதற்கு விஜய் சேதுபதி உடனே தளபதி விஜய்க்கு தனது ஆசையை முத்தத்தை வழங்கினார். தற்போது இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
