கிரிக்கெட் வீரராக நடிக்கும் விஜய் ஆண்டனி!

கொலைகாரன் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி தமிழரசன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சோனு சூட் நடிக்கிறார்.

இந்நிலையில், தமிழரசன் படத்திலிருந்து இடம் பெற்றுள்ள ஒரு புகைப்படத்தை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் விஜய் ஆண்டனி தமிழ்நாடு கிரிக்கெட் வீரராகவும், சோனு சூட் டெல்லி கிரிக்கெட் அணியின் வீரராகவும் இருப்பதுபோல அந்த புகைப்படத்தில் இருக்கிறார்கள்.

இதை வைத்து பார்க்கும் பொழுது தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனி கிரிக்கெட் வீரராக நடிக்க இருப்பது என்பது தெளிவாக தெரிகிறது.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால் தமிழரசன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் இருக்கிறது.

படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் வெளியாகும் என்று தெளிவாக படத்தின் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.

தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனி
தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனி

தமிழரசன் திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு திருப்புமுனையாக அமையும் என்று படத்தின் இயக்குனரும் ஒரு பிரபல பத்திரிகைக்கு பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version