
2015 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் குமார் தாதாவாக நடித்த திரைப்படம் வேதாளம்.
தங்கச்சி சென்டிமென்ட் மையமாகக் கொண்டு வெளியான இத்திரைப்படம் அவ்வாண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக அமைந்தது.
ALSO READ | மகேஷ்பாபுவின் சவாலை ஏற்று மரக்கன்று நட்ட தளபதி விஜய்
இப்படத்தில் தல அஜித் குமாருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து இருந்தார். தங்கையாக லட்சுமிமேனன் நடித்து இருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ என்ற பாடல் தல அஜித் குமார் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த பாடலாக அமைந்தது.
ALSO READ | மிஸ்கின் இயக்கத்தில் சிம்பு
இந்நிலையில், வேதாளம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய மெகா ஸ்டார் சிரஞ்சீவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தை சிறுத்தை சிவா தான் இயக்க வேண்டும் என்று சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்கு சிறுத்தை சிவா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த ‘ இப்படத்தை முடித்த பிறகு நிச்சயமாக உங்கள் படத்தை நான் இயக்குகிறேன் என்று வாக்கு வாங்கி கொடுத்துள்ளார்.
சிரஞ்சீவி ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி‘ திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO WATCH |