Danny – Tamil Official Teaser
உலகம் முழுவதும் கொரோனா என்ற நோயின் தாக்கத்தால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவும் அடங்கும் இதனால் பல துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே இருக்கும் நிலை இந்த நோயின் தாக்கம் இருக்கிறது. இந்த பெரும் பாதிப்பில் திரையுலகமும் தவித்து வருகிறது.
கடந்த மூன்று மாதங்களாக திரையரங்கள் மூடப்பட்டு எந்தவித படங்களும் வெளிவராமல் தவித்து வருகிறது. இந்த கடுமையான சூழ்நிலையில் பல சிறு தயாரிப்பு திரைப்படங்கள் நேரடியாக அமேசான் பிரைம், ஜி5 தமிழ், மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற இணையதளங்களில் படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் படங்களான ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பென்குயின் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.
இதனிடையே சந்தான மூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் படம் டோனி. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்த நிலையில் படம் வெளியாக பல முயற்சிகளை எடுத்து வந்த நிலையில் இந்த நோய் வந்து நிற்பதால் படத்தை நேரடியாக ஜி5 தமிழ் மூலமாக படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் உண்மையானால் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் அடுத்து வரலட்சுமி படமும் OTTயில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.