இயக்குநர் கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியான ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை வாணி கபூர்.
இப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரன்வீர் சிங் ஜோடியாக Befikre படத்தில் நடித்தார். அதன்பின்பு கடந்த ஆண்டு ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான வார் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகவுள்ள ‘பெல் பாட்டம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே #VaaniKapoor என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.