ஈரான் நாட்டவரையும் ஆடவைத்த விஜய் நடனம்

ஈரான் நாட்டவரையும் ஆடவைத்த விஜயின் நடனம்,

ஆம்! ஈரான் நாட்டில் ஒரு உடற்பயிற்சி கூடத்தில் உடற் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன் தளபதி விஜய் அவர்கள் நடித்த போக்கிரி திரைப்படத்திலிருந்து மாம்பழமாம் மாம்பழம் பாடல் ஒளிபரப்பப்பட்டு அதற்கேற்றார்போல் ஈரானியர்கள் ஆடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

இதை ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சீரியஸா வா சொல்றீங்க? எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு! நான் இதை எனது புதிய காலை வழக்கமாக மாற்றப் போகிறேன். படுக்கையிலிருந்து எழுந்தவுடன் ஏதேனும் தமிழ் பாடலை ஒளிபரப்பி, நடனமாடி அன்றைய தினத்தை சந்திக்க போகிறேன்

இதை தமிழ் ரசிகர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் ஆர்வத்துடன் ஷேர் செய்து வருகின்றனர். விஜய் நடனத்தில் தலைசிறந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களிலும் விஜய்யின் நடனத்திற்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போது இந்த வரிசையில் ஈரானியர்களும் இணைந்து உள்ளனர்.

 

Exit mobile version