Today Tamil Cinema News 31-01-2020
17 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜீவா!
தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவது மிகவும் கடினம் ஆனால் அந்த வார்த்தையை ஒரு சில நடிகர்கள் பூர்த்தி செய்துள்ளார்கள். அதில் ஒருவர்தான் நடிகர் ஜீவா பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி அவர்களின் இளைய மகன் ஜீவா படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு 2003 ஆம் ஆண்டு ஆசை ஆசையாய் என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
முதல் படம் ஜீவாவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின்பு அமீர் இயக்கத்தில் ஜீவா நடித்த ராம் திரைப்படம் ஜீவாவின் திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அதன் பின்பு ஜீவா நடித்த படங்கள் அனைத்துமே தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைந்தது இந்நிலையில், ஜீவா நடிக்க வந்து இன்றுடன் 17 வது ஆண்டை அடியெடுத்து வைக்கிறார். ஜீவாவின் திரைப் பயணம் தொடர லைவ் சினிமாவில் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மீண்டும் ரஜினி படத்தில் நயன்தாரா!
தர்பார் வெற்றிக்கு பிறகு ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ள நிலையில் தற்போது அந்த லிஸ்டில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இணைந்துள்ளார். தற்போது இந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டு உள்ளது.
Lady Superstar #Nayanthara joins the cast of #Thalaivar168@rajinikanth @directorsiva pic.twitter.com/RtofFJKCG5
— Sun Pictures (@sunpictures) January 31, 2020