லட்சுமி பாம் படத்தை அதிக விலைக்கு வாங்கிய ஹாட்ஸ்டார்!
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை இந்தியில் அக்ஷய்குமார் நடிப்பில் லாரன்ஸ் இயக்கத்தில் லட்சுமி பாம் என்ற பெயரில் தயாராகியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் மூடி இருப்பதால் லட்சுமி பாம் திரைப்படத்தை ஹாட்ஸ்டார் இல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், லட்சுமி பாம் படத்தை சுமார் 125 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது ஹாட் ஸ்டார் நிறுவனம். இதன்மூலம் OTTயில் அதிக விலைக்கு விலைபோன படம் என்ற பெருமையை பெறுகிறது லட்சுமி பாம்.
சந்தோஷ் சிவன் இயக்கத்தில் யோகிபாபு!
ரோஜா, தளபதி, இருவர், உயிரே, துப்பாக்கி, செக்கச் சிவந்த வானம், தர்பார் போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ்சிவன். இவர் ஒளிப்பதிவு தவிர்த்து ஒரு சில படங்களையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இவர் தற்போது ஜாக் அண்ட் ஜில் என்ற மலையாள படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளார்.
இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது. தமிழில் இப்படம் சென்டிமீட்டர் என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் யோகிபாபு முக்கியமான நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதே கதாபாத்திரத்தை மலையாளத்தில் பிரபல காமெடியனான சௌபின் சாஹிர் நடித்துள்ளார். இப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.