Today Tamil Cinema News 28-11-2019
சசிகுமார் சமுத்திரகனி உடன் இணையும் ஜோதிகா!
திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சூர்யா தயாரிப்பில் மட்டுமே நடித்து வருகிறார். குறிப்பாக, இவர் சமீபத்தில் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ராட்சசி. அதனைத் தொடர்ந்து கார்த்தியுடன் தம்பி படத்தில் நடித்து வருகிறார் ஜோதிகா. தற்போது, மீண்டும் சூர்யா தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் ஜோதிகாவுடன் சமுத்திரக்கனியும், சசிக்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது.
சொன்ன தேதியில் வெளியாகும் ஹீரோ!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான ஹீரோ வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கே ஜி ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் அவர்கள் தயாரித்துள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷினி நடித்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் கே ஜி ஆர் ஸ்டுடியோஸ் இந்தியில் வெளியாக உள்ள திரைப்படமான தபாங் 3 தமிழ் பதிப்பை வெளியிடும் அதே தினத்தில் சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தையும் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
500 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் தனுஷ் படம்!
நீண்ட இழுபறிக்கு பின்பு நாளை வெளியாகிறது என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம். இப்படத்தை இயக்கியுள்ள கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தான் அடுத்து தலைவர் ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் இயக்கப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனுஷ் அவர்கள் வடசென்னை, அசுரன், மாபெரும் வெற்றிக்கு பிறகு என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தையும் வெற்றிப்படமாக கொடுப்பாரா என்பதை தமிழ்த் திரையுலகம் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
இப்படம் தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தை ஐசரி கணேஷ் அவர்கள் வெளியிடும் உரிமை பெற்றுள்ளார். என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகாஆகாஷ் நடித்துள்ளார்.