மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த ரியாஸ் கான்!
பத்ரி படத்தில் தளபதி விஜய்க்கு அண்ணனாக நடித்து தமிழ்த் திரையுலகில் பிரபலம் ஆனவர் ரியாஸ்கான். அதன்பின்பு ஆளவந்தான் படத்தில் இரண்டாவது கமலஹாசன் ஆக நடித்து தனது திறமையை நிரூபித்து இன்றுவரை குணச்சித்திரம், வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் கலக்கி வரும் ரியாஸ் கான் தற்போது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் இணைந்துள்ளார். தற்போது, இந்த தகவலை ரியாஸ் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
பாலிவுட்டை கலக்கும் சல்மான் கானுக்கு இன்று பிறந்தநாள்!
பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகராக திகழ்பவர் சல்மான்கான். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெற்று வருகிறது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பிறகு பாலிவுட்டில் கலக்கும் ஒரே நடிகர் என்றால் அது சல்மான் கான் தான் சேரும். இந்நிலையில், சல்மான் கான் இன்று தனது 54-வது பிறந்தநாளை தனது ரசிகர்கள் மற்றும் திரை நண்பர்களுடன் இன்று கோலாகலமாக கொண்டாடினார்.
இணையத்தை கலக்கும் ரம்யா பாண்டியாவின் ஹாட் புகைப்படங்கள்!
ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியாவின் நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் அதன் பின்பு எந்த பட வாய்ப்பும் அவருக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில், விஜய் டிவி நடத்தும் குக் வித் கோமாளி என்கின்ற புரோகிராமில் பத்து பேர்களில் ஒருவராக பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், அவ்வப்போது தனது போட்டோ ஷூட் நடத்தி வரும் ரம்யா பாண்டியன். தற்போது, ஒரு புதிய போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகினி உடையில் கலக்கும் சாக்ஷி அகர்வால்!
காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்து பின்பு வெளியான விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். அதன் பின்பு எந்த பட வாய்ப்பும் கிடைக்காததால் விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் சீசன் 3 இல் 15 பேர்கள் கொண்ட போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் சாக்ஷி அகர்வால். இந்நிலையில், பிகினி உடையில் ஒரு ஹாட் போட்டோஷூட் நடத்தியுள்ளார் சாக்ஷி அகர்வால். தற்போது, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிறது.