சினிமா திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது? – அமைச்சர் கடம்பூர் ராஜூ!
நாடு முழுவதும் கொரோனா நோய் தாக்கத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சுமார் 60 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதில் பெரிதும் பாதிக்கப்பட்ட சினிமா திரையரங்குகளை எப்போது திறப்பது என்பது குறித்து கடம்பூர் ராஜு இன்று ஆலோசனை செய்தார்.
இந்த ஆலோசனையில் சினிமா திரையரங்குகளை ஜூன் மாதம் இறுதியில் அல்லது ஜூலை மாத முதல் வாரத்தில் திறக்க அனுமதி அளிக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இயக்குனர் அவதாரம் எடுக்கும் விஜய் ஆண்டனி!
திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதியுள்ளார் விஜய் ஆண்டனி. மேலும் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை சசி இயக்க மாட்டார் என விஜய் ஆண்டனி கூறியுள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் விஜய் ஆண்டனி.