பிரபல குற்றவாளியாக நடிக்கும் துல்கர் சல்மான்!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படம் ‘குருப்’. கேரளாவை சேர்ந்த பிரபல குற்றவாளி ஒருவர் பற்றிய புனைவுக்கதையே இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சோபிதா துலிபாலா நடிக்கின்றார். இந்த படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்குகிறார். ‘குருப்’ படத்தை துல்கர் சல்மான் சுமார் 35 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இந்நிலையில், இன்று ஈகை பெருநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
‘காக்கி’ படத்திற்கு டப்பிங் பேசிய ஸ்ரீகாந்த்!
அறிமுக இயக்குனர் செந்தில்குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி போலீசாக நடிக்கும் படம் ‘காக்கி’. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், ஸ்ரீகாந்த், மற்றும் நடிகை இந்தூஜா நடிக்கிறார்கள்.
இந்நிலையில், படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகளை மேற்கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டு உள்ளதால் தற்போது டப்பிங் பணிகளை ‘காக்கி’ படக்குழு துவக்கியுள்ளனர்.
முதல் கட்டமாக ஸ்ரீகாந்த் சம்பந்தபட்ட காட்சிகளை டப்பிங் செய்து முடிக்கலாம் என்று முடிவு செய்து ஸ்ரீகாந்தை வரவைத்து டப்பிங் பணிகளை துவக்கி உள்ளார்கள் ‘காக்கி’ படக்குழு.
பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில். பா. ரஞ்சித் தயாரிப்பில் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம் யோகிபாபு.
ஷான் என்பவர் இப்படத்தை இயக்கயிருக்கிறார். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. ஏற்கனவே யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா மற்றும் கூர்கா போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.