Tamil Cinema News
மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி!
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். தளபதி ரசிகர்கள் இந்த படத்தை தளபதி 64 என்று அன்புடன் அழைத்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில்.
தளபதி 65 படத்தை யார் இயக்குவார் என்ற போட்டி திரை உலகில் நிலவி வந்த நிலையில் தளபதி விஜய் மீண்டும் முருகதாசுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான சர்கார் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்!
தென்னிந்திய நடிகைகளில் நம்பர் நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். சமீபத்தில் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் கைவசம் உலகநாயகன் கமலஹாசன் அவர்களுடன் இந்தியன் 2 படம் மட்டுமே இவர் கைவசம் உள்ளது. இந்நிலையில், காஜல் அகர்வால் பிகினி உடையில் இருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படங்கள் இதோ
டக்கர் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது!
கார்த்திக் ஜி கிருஷ் இயக்கத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் படம் டக்கர். முழுக்க முழுக்க திரில்லர் கதையம்சத்துடன் உருவாகும் டக்கர் படத்தில் சித்தார்த் ஜோடியாக திவ்யான்ஷா கௌஷிக் நடிக்கிறார்.
மேலும் யோகிபாபு ஆர்,ஜே விக்னேஷ் என ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடிக்கிறார்கள். டக்கர் படத்தை ஃபேஷன் ஸ்டுடியோ சார்பாக சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரிக்கிறார்கள். டக்கர் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகிறது. இந்நிலையில், டக்கர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டார்.
என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் தமிழகத்தின் மொத்த வசூல் விவரம்!
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்து என்னை நோக்கி பாயும் தோட்டா கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதி வெளியானது. என்னை நோக்கி பாயும் தோட்டா படம் எதிர்பார்த்த அளவில் இல்லை. குறிப்பாக, தனுஷ் ரசிகர்களுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லை.
இதனால் பல பெரிய திரையரங்குகளில் வெளியிட ஒரே வாரத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா தூக்கி எறியப்பட்டது. இந்நிலையில், படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்களை கடந்த நிலையில் என்னை நோக்கி பாயும் தோட்டா தமிழகத்தில் மட்டும் சுமார் 20 கோடியை வசூல் செய்திருப்பதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த வசூல் படம் வாங்கிய தொகை விட மிகவும் குறைவு என்பதால் என்னை நோக்கி பாயும் தோட்டா நிச்சயம் ஒரு தோல்விப்படம் என்று சினிமா வட்டாரத்தில் சொல்லி வருகிறார்கள்.
தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்!
மறைந்த நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக மகாநதி என்ற பெயரில் நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். மகாநதி படத்தில் சாவித்திரியாக கீர்த்திசுரேஷ் நடித்திருந்தார். ஜெமினி கணேசன் ஆக துல்கர் சல்மான் நடித்திருந்தார். மகாநதி படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என 4 மொழிகளிலும் தயார் செய்திருந்தனர். மகாநதி படம் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடித்துப்போன படமாக அமைந்து போனது.
குறிப்பாக, சாவித்திரியாக கீர்த்தி சுரேஷின் நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதன் காரணமாக இந்திய அரசு வருடம்தோறும் வழங்கும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது இந்த வருடம் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு வழங்கியுள்ளார்கள்.
தற்போது, இந்த விருதினை இன்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் திருக்கரங்களால் நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றுக்கொண்டார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சூரரைப் போற்று படத்தின் டீசர் பற்றிய தகவல் அளித்த ஜிவி பிரகாஷ் குமார்!
காப்பான் படத்தையடுத்து சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்தநிலையில் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
The teaser of #sooraraipottru Will sport the #maaratheme … waiting for it to unveil Jan ? …
— G.V.Prakash Kumar (@gvprakash) December 23, 2019
இந்நிலையில், சூரரைப்போற்று படத்தின் டீசர் ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது தெரிவித்துள்ளார். இந்த செய்தியை கண்ட சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் காணப்படுகிறார்கள்.