சூரரைப் போற்று படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி!
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளியானால் அந்த படத்தில் ஏதேனும் ஒரு பாடலை அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களே பாடி வருகிறார்கள். தற்போது அந்த ஜுரத்தில் சூர்யாவும் இணைந்து விட்டார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள மாரா தீம் என்ற பாடலை சூர்யா பாடியுள்ளார் தற்போது இந்த பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகிறது.
லோகல் பாய் இது பட்டாசு படத்தின் தெலுங்கு டைட்டில்!
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த பொங்கலுக்கு வெளியான பட்டாசு திரைப்படம் தமிழக ரசிகர்களிடம் பேராதரவை பெற்ற நிலையில். படத்தை தெலுங்கில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. பட்டாசு படத்தின் தெலுங்கு பதிப்புக்கு லோகல் பாய் என்று பெயர் வைத்துள்ளார்கள். படம் வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.
உன் காதல் இருந்தால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
அறிமுக இயக்குனர் ஹாஷிம் மரிகர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் உளவியல் த்ரில்லர் படம் உன் காதல் இருந்தால். படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக சந்திரிகா ரவி நடிக்கிறார். மலையாள நடிகர் மக்பூல் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு இசை மன்சூர் அகமது. விறு விறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டார்.