Today Tamil Cinema News 21-01-2020
சிறு படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி!
அறிமுக இயக்குனர் ரத்தினா சிவன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படம் சிறு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த படத்தில் ஜீவா நடித்து வருகிறார். படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார். பப்பி படத்தில் ஹீரோ வருண் படத்தின் வில்லனாக நடிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில், படம் வருகிற பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் வரும் 24-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
மீண்டும் அரண்மனையை கையிலெடுத்த சுந்தர் சி!
‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ மற்றும் ‘ஆக்ஷன்’ படங்களின் தோல்விக்கு பிறகு சுந்தர் சி மீண்டும் தனது வெற்றிப் படமான அரண்மனை-3 படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க உள்ளதாகவும் கதாநாயகியாக ஆண்ட்ரியா மற்றும் ராசி கண்ணா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உன் காதல் இருந்தால் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ரவி!
அறிமுக இயக்குனர் ஹாஷிம் மரிகர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் உளவியல் த்ரில்லர் படம் உன் காதல் இருந்தால். படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக சந்திரிகா ரவி நடிக்கிறார். மலையாள நடிகர் மக்பூல் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு இசை மன்சூர் அகமது. விறு விறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி நாளை வெளியிடுகிறார்.