விஷ்வா பாயை ஓ.டி.டியில் பார்க்கலாம்!
ஏ.எல் விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி வெளியான படம் தலைவா. படம் வெளியாக பல அரசியல் தலையீடுகள் இருந்தாலும் இரண்டு வாரம் கழித்து ஒருவழியாக படம் வெளியானது.
தலைவா படத்தை பார்த்த தளபதி ரசிகர்கள் தளபதியை விஷ்வா பாய் என்றே அழைத்து வந்தார்கள். அந்த அளவுக்கு தலைவா படத்தில் தளபதி விஜயின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில், தலைவா படத்தை தற்போது அமேசான் பிரைமில் பார்க்க முடியும். பல படங்களை அமேசான் ப்ரைம் இணைத்து வரும் நிலையில். தற்போது தலைவா படத்தையும் இணைத்து இருக்கிறார்கள்.
ஆண்ட்ரியா நடிப்பில் கா படத்தின் டீசர் வெளியானது!
தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகிகள் இராஜ்யம் என்றே கூறலாம். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அமலா பால் என கதாநாயகிகள் மையமாக வைத்தே படங்கள் தற்போது வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஆண்ட்ரியாவும் இணைந்திருக்கிறார்.
நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் கா திரைப்படத்தின் டீஸர் இன்று வெளியானது. இந்த டீசரில் முழுக்க முழுக்க காடுகளில் நடக்கும் அசம்பாவிதங்களை கொண்டே படம் இயக்கப்பட்டுள்ளது என்பது நன்றாக தெரிகிறது.
ஆண்ட்ரியாவின் சினிமா கேரியரில் கா திரைப்படம் நிச்சயம் முத்திரை பதிக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என்றே கூறலாம் அந்த அளவிற்கு இந்த டீசர் இருக்கிறது.
டீசரை பார்க்க….
முந்தானை முடிச்சி ரீமேக்கில் இவரா!
1983-ஆம் ஆண்டு கே.பாக்யராஜ் இயக்கி நடித்த திரைப்படம் முந்தானை முடிச்சு. முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் கணவன் மனைவி பாசத்தை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் அந்த காலகட்டத்தில் பட்டிதொட்டியெல்லாம் சென்று மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
தற்போது சினிமாவில் பல படங்கள் ரீமேக் செய்து வரும் இந்த சமயத்தில் முந்தானை முடிச்சு படத்தை ரீமேக் செய்யலாம் என்று கே.பாக்யராஜ் முடிவு செய்துள்ளாராம்.
மேலும் தனது கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்க வேண்டும் என்று பாக்யராஜ் கூறினாராம் அதற்கு சசிகுமார் ஓகே என்று சொல்லிவிட்டாராம். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிகிறது. தற்போது இவர்கள் சந்தித்த புகைப்படத்தை பாக்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அரைகுறை ஆடையில் கவர்ச்சி நடனம் போட்ட வேதிகா!
நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். இதனிடையே சினிமா துறையை சேர்ந்தவர்கள் அவர்கள் அவர்களுக்கு பிடித்த மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இதனிடையே நடிகை வேதிகா இந்த ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் அரைகுறை ஆடையுடன் நடனமாடும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வேதிகாவை பாராட்டி ரசித்து வருகிறார்கள்.
#Dance ? #StayHome #ParrisGoebel #StayHome #India #Corny #Quarantine #SocialDistancing #ParrisLive pic.twitter.com/EVTHfDF2PQ
— Vedhika (@Vedhika4u) May 20, 2020