இரண்டாவது திருமணத்தை ரகசியமாக செய்து கொண்ட நடிகை!
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் அமலாபால். அந்தப் படத்திலேயே பல எதிர்ப்புகளை சந்தித்த அமலாபால் அதன் பின்பு சிறிது கவனத்துடன் கவுரமான தோற்றங்களில் நடித்து வந்தார்.
ஏ. எல். விஜய் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தெய்வத்திருமகன் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பின்னர் தளபதி விஜயுடன் தலைவா படம் மற்றும் ஆர்யாவுடன் சேட்டை என தொடர்ந்து வெற்றிப் படங்கள் நடித்து வந்த அமலா பால் தனது நீண்ட நாள் நெருங்கி இயக்குனரான ஏன் விஜய்யை திருமணம் செய்துகொண்டார்.
பின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்ற அமலாபால். பின்னர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். கடைசியாக இவர் நடித்த ஆடை திரைப்படம் இவருக்கு பெரிதும் புகழ் சேர்த்தது.
இந்நிலையில், அமலாபால் இன்று பவ்னிந்தர்சிங் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மீண்டும் ட்விட்டர் பக்கம் திரும்பிய வைகைபுயல்!
தமிழ் சினிமாவில் நாகேஷ் அவர்களுக்கு பிறகு தனது உடலமைப்பை வைத்து நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று இன்றுவரை நம்பர் ஒன் நகைச்சுவை நடிகர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் வைகைப்புயல் வடிவேலு.
சுமார் மூன்று தலைமுறைகளாக நடிப்பில் கவனம் செலுத்தி வரும் வடிவேலு அவர்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து. அதன் விளைவாக திரைத்துறையில் இருந்து சற்று தானாக விலகி இருந்தார்.
தற்போது மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ள வடிவேலு தனது புதிய ட்விட்டர் அக்கவுண்ட் ஒன்றை ஓபன் செய்துள்ளார். தற்போது. அந்த அக்கவுண்ட் ஓபன் செய்து தனது ரசிகர்கள் மற்றும் திரை நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோவை நாம் பார்க்கிறோம்….
பல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கம் தமிழ் மக்களுக்கு வணக்கம் ?
என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய் விட்டது. அதனால் #ரஜினி ஐ போல் திரும்பி வந்துட்ட சொல்லு ?#PrayForNesamani ஆ அட பாவீங்களா !! சரி நன்றி ப்ரென்ட்ஸ் #விஜய் #சூர்யா. என்றும் #அஜித் ஐ மறக்க மாட்டேன் ? pic.twitter.com/dSjWRr0kVs
— Actor Vadivelu (@VadiveluOffl) March 20, 2020
மாஸ்டர் படத்தில் இத்தனை கோடி சம்பளம் வாங்கிய லோகேஷ் கனகராஜ்!
மாநகரம், கைதி படங்களின் வெற்றிக்குப் பிறகு தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படத்திற்காக லோகேஷ் முதலில் பேசிய சம்பளம் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ஆனால் படத்தின் வியாபாரம் மிகப்பெரிய அளவுக்கு சென்றதால் லோகேஷ் கனகராஜ் சம்பளம் ஏற்றிய படகு சுமார் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படம் ஒருவேளை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாள். அட்லீ போல லோகேஷ் கனகராஜ் 10 கோடி 15 கோடி சம்பளம் வாங்க வாய்ப்பு உள்ளது.