சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்த தர்பார்!
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி தர்பார் உலகம் முழுவதும் வெளியானது. படத்தில் ரஜினி நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்து போனதால் படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்நிலையில், தர்பார் படத்தின் சென்னை வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
படம் சென்னையில் மட்டும் சுமார் 10 நாட்களில் 13 கோடியே 50 லட்சம் வசூல் செய்துள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் சுமார் பத்து நாட்களில் 100 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் படத்தின் வசூலில் புது உச்சம் தொடும் என்று தெரிகிறது.

தர்பார் உடன் வசூலில் போட்டி போடும் பட்டாசு!
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த பொங்கலன்று தமிழகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியான பட்டாசு 4 நாட்களில் தமிழகத்தில் மட்டும் சுமார் 25 கோடி வசூல் செய்துள்ளது.
அடிமுறை கலையைப் பற்றி சொல்லியிருக்கும் பட்டாசு தமிழர்களின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் படத்தை இயக்கியுள்ளார் துரைசெந்தில்குமார். படம் முழுக்க தனுஷ் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருப்பதால் இந்த பொங்கலுக்கு மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து படத்தை பார்த்து வருகிறார்கள்.
பட்டாசு படத்தின் இந்த வசூல் தர்பார் படத்திற்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. மேலும் தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் பட்டாசு நிச்சயம் வசூலில் புது உச்சத்தை தொடும் என்று தெரிகிறது.

மாஸ்டர் படத்தில் ஆக்ஷன் காட்சியில் நடிக்க தயாராகும் மாளவிகா மோகன்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். படத்தில் விஜய் பேராசிரியராக நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக மாளவிகா நடிக்கிறார். படத்தில் ஆக்ஷன் காட்சி ஒன்று விரைவில் படமாக்க உள்ளார்களாம். இந்த காட்சியில் நடிக்க மாளவிகா மோகன் பலவிதமாக பிரத்யேக சண்டை பயிற்சி பெற்று வருகிறாராம். தற்போது இந்த தகவலை பிரபல பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார் மாளவிகா மோகன்.

200 கோடி வியாபாரம் – சாதனை செய்த மாஸ்டர்!
பொதுவாக ஒரு படம் வெளியீட்டிற்கு தயாரானபோது தான் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்குவார்கள். ஆனால் அந்த முறையை முதன் முறையாக மாற்றியுள்ளது விஜய்திரைப்படம் ஆம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில் படத்தை உலகம் முழுவதும் ஏரியா வாரியாக பிரித்து வியாபாரம் செய்துள்ளது மாஸ்டர் படக்குழு சுமார் 200 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு படம் வெளியாக மூன்று மாதங்கள் உள்ள நிலையில் அதற்குள்ளாக அனைத்து ஏரியாக்களை படக்குழு விற்றுள்ளது என்பது பெரும் சாதனை என்று சினிமா வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.

பிரபாஸின் அடுத்த படத்தை பற்றிய தகவல் வெளியானது!
பாகுபலி, சாஹோ படங்களின் வெற்றிக்கு பிறகு பிரபாஸ் பிரபல தெலுங்கு இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராகிவருகிறது. படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சுமார் 200 கோடி மதிப்பில் உருவாகிவரும் படத்தை மூத்த நடிகர் கிருஷ்ணம் ராஜுவின் ஸ்டுடியோ கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிக்கிறது.

நடன இயக்குனர் ஸ்ரீதர் உடன் நடனமாடிய சாயிசா வீடியோ வெளியானது!
வனமகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாயிசா. பின்னர் ஆர்யாவுக்கு ஜோடியாக கஜினிகாந்த் படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் இருவருக்கும் காதல் மலர்ந்ததால் நடிப்பதை விட்டுவிட்டு ஆர்யாவை திருமணம் செய்துகொண்டார் சாயிசா.
இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை இருப்பதாகவும் அதற்காக மீண்டும் நடனப் பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார் சாயிஷா, இந்நிலையில், சமீபத்தில் நடன இயக்குனர் ஸ்ரீதர் உடன் நடன பயிற்சி கற்று கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
— Sayyeshaa (@sayyeshaa) January 18, 2020