Today Tamil Cinema News 18-11-2019
திரை உலகின் அதிசய நாயகன் தல அஜித் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
நடிகர் கமல்ஹாசன் நடிக்க வந்து 60 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் உங்கள் நான் என்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி இருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தமிழக முதல்வராக இருக்கும் இ பி எஸ் ஒரு அதிசயத்தின் காரணமாக முதலமைச்சரானார்.
அதேபோல நாளைக்கு அதிசயங்கள் நிறைய நடக்கும் என்று சூசகமாக பேசியிருந்தார். ரஜினியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று அளித்த பேட்டியில் ரஜினி, கமல், விஜய் இவர்களைவிட அஜித் அவர்கள் மிகவும் தூய்மையானவர் என்றும்.தமிழ் திரையுலகில் அதிசய நாயகன் அஜித் என்றும்.
மேலும் ரஜினி, விஜய், கமல் மூவர் கூட்டணி அமைந்தால் நாங்கள் அஜித்தை வைத்து அந்த கூட்டணியை தோற்கடிப்போம் என்று ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
ராஜேந்திர பாலாஜி கடந்த ஓராண்டாக அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்று பலமுறை பல இடங்களில் குரல் கொடுத்து வருகிறார். ஆனால், தல அஜித் இதை கண்டுகொள்வதாக இல்லை.
தல அஜித் சீக்கிரமே அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்தப் பேச்சுக்கு ஒரு முடிவு கட்டும் வகையில் விரைவில் மீடியாவிற்கு ஒரு பேட்டி அளிக்க வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
என் வாழ்வில் மிகச் சிறந்த டப்பிங் பகுதி முருகதாஸ்!
புரட்சி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார்.
லைகா புரொடக்ஷன் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் தர்பார் படத்தில் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து பொங்கல் வெளியீடாக திரைக்கு வர தயாராக உள்ளது.
இந்நிலையில், தர்பார் படத்தின் டப்பிங் தற்போது தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் டப்பிங் பேசி முடித்து விட்டதாகவும். ரஜினி அவர்களுடன் தான் இணைந்து இந்த டப்பிங் பகுதி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் கொடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.
வானம் கொட்டட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!
மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா நடிப்பில் உருவாகி வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வானம் கொட்டட்டும்’. இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது.