இன்றைய சினிமா செய்திகள் (18-10-2019)

அன்னை இல்லத்தில் கமலஹாசன்!

கமல்ஹாசன் நடிக்க வந்து சுமார் 60 ஆண்டுகள் இன்று நிறைவடைகிறது. இந்த நிகழ்வை கமலஹாசன் தனது ஆஸ்தான திரை குருவான நடிகர் திலகம் திரு சிவாஜிகணேசன் அவர்களின் அன்னை இல்லத்தில் இன்று அவரின் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு தனது திரை பயணத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

kamalakaasan-at-sivaji-house-

sivaji-family-00000

லாபம் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது!

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு லாபம் என்று பெயர் வைத்துள்ளார்கள். லாபம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். லாபம் படத்தில் விஜய்சேதுபதி விவசாயியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெருவாயில் கிராமத்தில் இன்று துவங்கியது.

VijaySethupathi-ShrutiHaasan-SPJhananathan-Laabam-000885

 

ஹீரோ படத்தின் செகண்ட் லுக் இதோ!

பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினி நடிக்கிறார்.
ஹீரோ படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

hero-Second-Look-poster-00022222

அடுத்தடுத்த படங்களில் இணையும் பிரபு தேவா சல்மான் கான்!

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் டபாங்க்-3 படத்தின் மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது. டபாங்க்-3 படம் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகிறது. இந்நிலையில், மீண்டும் பிரபுதேவா, சல்மான் கான் இணைந்து ஒரு புதிய படத்தில் பணிபுரிய உள்ளார்கள். தற்போது, அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த படத்திற்கு ராதே என்று பெயர் வைத்துள்ளார்கள்.

dabangg3-posterradhe-first-look-poster-00256

Exit mobile version