இன்றைய சினிமா செய்திகள் (17-10-2019)
பிகில் திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!
பிகில் திரைப்படம் வரும் 25-ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் இன்று தகவல் வெளியிட்டுள்ளார்.
விஜய்யும் கார்த்தியும் நேருக்கு நேர்!
நடிகர் கார்த்தி நடித்திருக்கும் கைதி திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பாகவே படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நடிகர் கார்த்தி, விஜய்யின் பிகில் திரைப்படத்துடன் நேரடியாக மோதுவது உறுதியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷின் புதிய பட அறிவிப்பு!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். கடந்த ஆண்டு நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதன் பிறகு சிறிது காலம் நடிப்பிற்கு ஓய்வு அளித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது, ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தினை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த போஸ்டரில் நடிகை கீர்த்தி சுரேஷ் நிறைமாத கர்ப்பிணியாக நடித்துள்ளார். தற்போது அந்த படத்திற்கு பென்குயின் என்று பெயர் வைத்துள்ளார்கள்.
இன்று நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாள் என்பதால் படக்குழு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
பிரபுதேவாவின் புதிய படத்தை வாங்கிய சன் டிவி!
பிரபதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு ஊமை விழிகள் என பெயர் வைத்துள்ளார்கள். இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார்.
ஊமை விழிகள் மிக பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் குழுமம் ஒரு பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளது.
ஸ்டாலினையும் ஈர்த்த அசுரன்!
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 4-தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியானது அசுரன்.
அசுரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற உடன் 100 கோடி வசூலை ஈட்டி தந்தது.
இந்நிலையில், இப்படத்தினை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் தளபதி ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளுடன் தூத்துக்குடியில் உள்ள பிரபல திரையரங்கில் அசுரன் படத்தை கண்டு களித்தார்.
#Asuran – படம் மட்டுமல்ல பாடம்!
பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!
கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja-வுக்கும் பாராட்டுகள் pic.twitter.com/i6PYyRTPfV
— M.K.Stalin (@mkstalin) October 17, 2019