Today Tamil Cinema News 13-12-2019
பிகில் வசூலைப் பற்றி வாயை திறந்த அர்ச்சனா கல்பாத்தி!
மூன்றாவது முறையாக விஜய், அட்லி கூட்டணியில் தீபாவளிக்கு மிகப்பிரம்மாண்டமாக வெளியான படம் பிகில். பிகில் திரைப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல் செய்தது என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. பின்னர், 25 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் 300 கோடியை வசூல் செய்தது என்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்தன. ஆனால், தயாரிப்பு நிறுவனமும் பிகில் படத்தின் வசூலைப் பற்றி எந்த ஒரு தகவலும் கூறவில்லை.
இந்நிலையில், முதல்முறையாக பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தற்போது அளித்த பேட்டியில். பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடியை வசூல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலின் மூலம் பிகில் இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை பெறுகிறது.
இளைஞர்களை கவர்ந்த கேப்மாரி!
விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் இன்று கேப்மாரி வெளியானது. இளைஞர்களை திருப்திபடுத்தும் விதமாக எடுக்கப்பட்ட கேப்மாரி இளைஞர்களை திருப்திப்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.
கேப்மாரி ஜெய்யின் 25 திரைப்படம் என்பதால் கொஞ்சம் பார்த்து நிதானமாக நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்திருந்தாலும் படத்தில் வரும் சில நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பலமாக உள்ளது. கேப்மாரி நிச்சயம் ஜெய்க்கு திருப்புமுனை படமாக அமையும் என்றே கூறலாம்.
வெற்றிகரமாக 50வது நாளைக் கடந்த பிகில்!
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான படம் பிகில். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றாலும் வசூலில் பிகில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனால் உலகம் முழுவதும் பிகில் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக பிகில் விளங்கி வருகிறது. இந்நிலையில், பிகில் வெளியாகி இன்றுடன் 50 நாட்களை கடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘யு’ சான்றிதழை கைப்பற்றிய சிவகார்த்திகேயன் படம்!
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியாகிறது. ஹீரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்கிறார். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷினி நடிக்கிறார்.
இதனிடையே, ஹீரோ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஹீரோ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.