Today Tamil Cinema News 13-04-2020

அந்த காரம் படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது!

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் இயக்குனர்கள் படங்களை தயாரித்து வரும் சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. அந்த வகையில் இயக்குனர் அட்லி தற்போது அந்த காரம் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

அறிமுக இயக்குனர் விக்னராஜன் இயக்கத்தில் கைதி புகழ் அர்ஜுன் நடிக்கும் அந்த காரம் படம் திரில்லராக உருவாகி வருகிறது.

இந்நிலையில், நாளை தமிழ் வருடப்பிறப்பு என்பதால் அந்த நாளில் படத்தின் டிரைலரை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று அட்லி நினைத்துள்ளார். அதனால் நாளை மாலை 5 மணிக்கு அந்த காரம் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே அட்லி தயாரிப்பில் ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவான சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Andhaghaaram-poster
Andha ghaaram-poster

கவண் பட புகழ் மடோனா செபாஸ்டியன் கலக்கல் புகைப்படங்கள்!

actress-madonna-sebastian
actress-madonna-sebastian
madonna-sebastian
madonna-sebastian
madonna-sebastian-cute-pic
madonna-sebastian-cute-pic
madonna-sebastian-latest-photo
madonna-sebastian-latest-photo
madonna-sebastian-new-photo
madonna-sebastian-new-photo
tamil-actress-madonna-sebastian
tamil-actress-madonna-sebastian

முதல் முறையாக நீச்சல் உடையில் ஹன்சிகா!

ஹன்சிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என நடித்து வந்தவர். கடந்த சில வருடமாகவே இவர் மார்க்கெட் இழந்து, சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் மகா படத்தின் மூலம் தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.

இதற்காக இவர் உடல் எடை குறைத்துள்ளது அனைவரும் அறிந்ததே. மேலும், ஹன்சிகா முதன் முறையாக நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

hansika-motwani
hansika-motwani
hansika-motwani-bikini-image
hansika-motwani-bikini-image

இந்தியாவில் இயக்குனர்களில் அதிக சம்பளம் வாங்கும் நபர் இவரா!

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் என்றால் ஒரு சில நபர்களே கூறலாம். குறிப்பாக இயக்குனர் சங்கர், ஏ.ஆர். முருகதாஸ், பாகுபலி புகழ் ராஜமவுலி இவர்கள் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் என்று உறுதியாக கூறலாம்.

ஆனால், இவர்களையே மிஞ்சிய ஒரு தமிழ் இயக்குனர் தற்போது இந்தியாவில் உருவாக்கியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை நடனப்புயல் என்று அழைக்கப்படும் ராகவா லாரன்ஸ் தான்.

இவர் சமீபத்தில் இயக்கும் படங்கள் எல்லாமே வசூலில் சுமார் 100 கோடிக்கு மேல் வருகிறது. குறிப்பாக இவர் இயக்கிய காஞ்சனா 1, 2, 3 என்று அனைத்து பாகங்களுமே வசூலில் சக்கைப்போடு போட்டது.

இந்நிலையில், காஞ்சனா-2 இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார் நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு சுமார் 50 கோடி சம்பளம் வழங்கி உள்ளதாக படக்குழு தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் என்ற பெருமையை பெறுகிறார் தமிழகத்தைச் சேர்ந்த ராகவா லாரன்ஸ்.

akshay-kumar-and-raghava-lawrence
akshay-kumar-and-raghava-lawrence
Exit mobile version