Today Tamil Cinema News 12-12-2019
அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடித்த படங்கள் எல்லாமே வெற்றியை பெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் தேவரகொண்டா வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் விஜய்தேவரகொண்டா ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். தற்போது, ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் தேவரகொண்டா இருவரும் இருக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான ஹீரோ வரும் டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகிறது. ஹீரோ படத்தை கே. ஜி. ஆர். ஸ்டுடியோஸ் ராஜேஷ் அவர்கள் தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷினி நடித்துள்ளார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் கே ஜி ஆர் ஸ்டுடியோஸ் இந்தியில் வெளியாக உள்ள திரைப்படமான தபாங் 3 தமிழ் பதிப்பை வெளியிடும் அதே தினத்தில் சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தையும் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹீரோ படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
பிக்பாஸ் போட்டியின் மூலம் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தனுசு ராசி நேயர்களே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்நிலையில், 2016ம் ஆண்டு விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பெல்லிசூபுலு.
தற்போது, இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்க உள்ளார்கள். இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது அதன் புகைப்படங்கள் இதோ