Today Tamil Cinema News 11-12-2019
ஜிப்ஸி வெளியாகும் தேதி!
அறிமுக இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படம் ஜிப்ஸி. ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். படத்தில் ஜீவா ஊர் ஊராகச் சென்று பாட்டு பாடும் கலைஞராக நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் அனைத்து பாடல்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஜிப்ஸி படத்தை ஒலிம்பியா மூவீஸ் சார்பாக அம்பேத்கர் தயாரிக்கிறார். இந்நிலையில், ஜிப்ஸி திரைப்படம் அடுத்த ஆண்டு குடியரசு தினத்தன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
தர்பார் படத்தின் மல்டிபிளக்ஸ் உரிமையை கைப்பற்றிய திரையரங்கம்!
ரஜினி-முருகதாஸ் கூட்டணியில் பிரமாண்டமாக தயாராகி உள்ள படம் தர்பார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி தர்பார் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.தர்பார் திரைப்படம் பொங்கல் வெளியீடாக வருகின்ற ஜனவரி மாதம் 9-ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், தர்பார் படத்தின் மல்டிபிளக்ஸ் உரிமையை பி.வி.ஆர் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. தற்போது, இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பி.வி.ஆர் சினிமாஸ் அறிவித்துள்ளது.
தர்பார் கேரள உரிமையை பெரும் தொகை வாங்கிய நிறுவனம்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் கேரள உரிமையை கே.டி.சி குழு அதிக தொகை கொடுத்து எம்.ஜி முறையில் வாங்கியுள்ளது.
இந்நிலையில், தர்பார் திரைப்படத்தை கேரளா முழுவதும் கல்பகா பிலிம்ஸ் வெளியிடுகிறது.
தம்பி தமிழகத்தில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது!
கைதி படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்திக் அவரது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து தம்பி என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த நிலையில் தம்பி திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், தம்பி திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இடவெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ரஜினியின் 168 வது படத்தின் பூஜையுடன் துவங்கியது!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பெயர் வைக்காத இந்த படத்திற்கு தற்போது ரஜினி ரசிகர்கள் தலைவர் 168 என்று அழைத்து வருகிறார்கள். தலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீனா, குஷ்பு, இருவரும் ரஜினியுடன் இந்த படத்தின் மூலம் இணைகிறார்கள். தலைவர் 168 படத்தில் சூரி, சதீஷ் எனப் பெரும் நடிகர் பட்டாளமே நடிக்கிறார்கள். தலைவர் 168 படத்திற்கு டி இமான் இசை அமைக்கிறார்.
இந்நிலையில், தலைவர் 168 படத்தின் பூஜை இன்று மிக பிரம்மாண்டமாக போடப்பட்டது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.