இன்றைய சினிமா செய்திகள் 10-11-2019

இன்றைய சினிமா செய்திகள் 10-11-2019

சூரரைப் போற்று படத்தின் பஸ்ட் லுக் வெளியானது!

காப்பான் படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ண பலமுரளி நடித்து வருகிறார்.

சூரரைப் போற்று படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில், சூரரைப்போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

Soorarai-Pottru-First-Look-poster-000

சைக்கோ டிசம்பர் மாதம் வெளியாகிறது!

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சைக்கோ திரைப்படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கண்பார்வையற்ற நபராக நடித்து வருகிறார். உதயநிதி ஜோடியாக அதிதி ராவ் ஹைடாரி, நித்யாமேனன், நடித்து வருகிறார்கள்.

முக்கிய கதாபாத்திரத்தில் ராம் நடித்து வருகிறார். சைக்கோ திரைப்படத்தை டபுள் மீனிங் புரோடக்சன் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் நவம்பர் மாதம் இறுதியில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சைக்கோ திரைப்படம் டிசம்பர் மாதம் 27ம் தேதி திரைக்கு வருகிறது.

Psycho-000

ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன்!

மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் முதல்முறையாக நடிக்கிறார். மூக்குத்தி அம்மன் படத்தை ஆர் ஜே பாலாஜி, சரவணன் உடன் இணைந்து இயக்குகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் திரில்லர் அமைந்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

Mookuthi-Amman-000

Exit mobile version