1 ஒரு ரூபாய் சம்பளம் போதும். ஒரு வருடத்திற்கு! – நடிகை ஆர்த்தி
உலகம் முழுக்க கரோனா என்ற நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல துறைகள் செயல்படாமலேயே அழியும் நிலையில் இருக்கிறது.
இந்நிலையில், திரைத்துறையை எப்படியும் பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டுமென்று பல நடிகர் நடிகைகள் போராடி வருகிறார்கள்.
குறிப்பாக, விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண் போன்ற நடிகர்கள் சம்பளத்தை பாதியாக வாங்கிக் கொள்ள ஒப்புதல் கொடுத்து உள்ளார்கள்.
அதுமட்டுமின்றி, விஷ்ணுவிஷால் தனது மூன்று படங்களின் சம்பளத்தை தயாரிப்பு நிறுவனத்திற்கு அளித்துள்ளார். இப்படி நடிகர்கள் தொடர்ந்து திரைத்துறையை காப்பாற்ற போராடி வருகிறார்கள்.
இவர்கள் மத்தியில் நகைச்சுவை நடிகை ஆர்த்தி அடுத்த ஓராண்டு நான் நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக ஒரு ரூபாய் மட்டுமே நான் வாங்குவேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். ஆர்த்தி இந்த முடிவை திரைத்துறையினர் பெரிதும் பாராட்டி மகிழ்ந்து வருகின்றனர்.
நான் விரும்பும் என் மரியாதைக்குரிய திரைத்துறைக்கு என்னால் முடிந்தது???
உங்களை மகிழ்விப்பதே என் மகிழ்ச்சி ???
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லை என்ற நிலை வேண்டும் ???#spreadinglove #sacrifice #HelpingHands #cinema #love #producer #director #actor pic.twitter.com/j00sWOxZ4d— Actress Harathi (@harathi_hahaha) May 9, 2020
2 சர்கார் படத்தை தனியாக பார்த்த வெற்றி தியேட்டர் உரிமையாளர்!
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தியேட்டர்கள் மூடி சுமார் 45 நாட்களுக்கு மேலாகிறது. தியேட்டர்கள் இயங்காததால் பல திரையரங்குகளில் எலிகள் உள்ளே புகுந்து பார்வையாளர்கள் அமர்ந்து இருக்கும் இருக்கைகளை கிழித்து நாசம் செய்து வருகிறது.
இதனை தடுக்க பல தியேட்டர்களில் எப்போதும்போல படங்களை வாரத்திற்கு ஒரு முறை போட்டு பார்த்து வருகிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.
அதேபோல குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் உரிமையாளர் ராகேஷ் கவுதமன் நேற்று தியேட்டரில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான சர்க்கார் திரைப்படத்தை போட்டு பார்த்துள்ளார். தற்போது தான் பார்த்த அந்த தருணத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராக்கேஷ் கௌதமன்.
This week checks done !!!
Projection ✅
Sound ✅
Cleanliness ✅
A/C ✅#RGBVettri pic.twitter.com/QlCsQGIUGC— Rakesh Gowthaman (@VettriTheatres) May 9, 2020
3 களரி கற்று வரும் அதிதி ராவ்!
கார்த்திக்கு ஜோடியாக காற்று வெளியிடை படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார் அதீதி ராவ் ஹைதரி. இதைத் தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அதீதி, தற்போது விஜய் சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’ மற்றும் ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடன்காக இருக்கும் நிலையில், அதீதி களரி பயிற்சி எடுத்து வருகிறார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram