Today Tamil Cinema News 06-12-2019
தர்பார் இசை நாளை வெளியாகிறது!
சர்க்கார் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏ, ஆர், முருகதாஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தை இயக்குகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக தர்பார் படத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில் நாளை தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக பெற உள்ளது.
ஏற்கனவே அனிருத் இசையில் தர்பார் படத்தின் ஓபனிங் சாங் சும்மா கிளி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டாக்டர் என்ற படத்தில் நடிக்கிறார். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக டாக்டராக நடிக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியா மோகன் நடிக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் உனக்காக உனக்காக படத்தில் கதாநாயகனாக நடித்த வினை நடிக்கிறார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இந்நிலையில், டாக்டர் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.
இந்தியாவில் அதிக நபர்கள் பார்த்த வீடியோ என்ற பெருமையை பெற்ற ரவுடி பேபி!
தனுஷ் நடித்து 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் மாரி2. மாரி2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார்.
இந்நிலையில், மாரி2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் அனைத்து ரசிகர்களும் மிகவும் பிடித்த பாடலாக உருவெடுத்தது. சுமார், 8 கோடி ரசிகர்கள் ரவுடி தேவி பாடலை யூடியூபில் பார்த்து இருந்தனர்.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு அதிக நபர்கள் பார்த்த வீடியோ என்ற பெருமையை ரவுடி பேபி பாடல் பெற்றுள்ளது.