தன்னுடைய முழு சம்பளத்தையும் விட்டுக்கொடுத்த விஷ்ணு விஷால்!
சீனாவிலிருந்து தோன்றிய கரோனா வைரஸ் இன்று உலகையே மிரட்டி வருகிறது. இதன் தாக்கம் தற்போது இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இதனால் பல துறைகள் பெரும் பாதிப்பில் இருக்கும் நிலையில் குறிப்பாக திரைத்துறை மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல நடிகர் நடிகைகளும் தங்களால் இயன்ற நிதி உதவியை திரைத் துறையினருக்கு வழங்கி வருகின்றனர்.
இதனிடையே, நடிகர் விஷ்ணு விஷால் தான் நடிக்கும் மூன்று படங்களின் சம்பளத்தையும் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் வழங்கியுள்ளார். விஷ்ணு விஷாலின் இந்த செயலை திரையுலகம் பெரிதும் பாராட்டி வருகிறது.
ஜெய்க்கு ஜோடியாகும் வாணி போஜன்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
இதனிடையே, கார்த்திக் சுப்புராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு ஒரு புதிய வெப்சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளார். இந்த வெப் சீரியஸில் கதாநாயகனாக ஜெய் நடிக்கிறார்.
கதாநாயகியாக வாணி போஜன் நடிக்கவிருக்கிறார். மேற்கொண்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. முதல்முறையாக வெப்சீரிஸ் ஜெய் நடிக்க இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.