வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் ட்ரெய்லர் வெளியானது!
விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ள வேர்ல்ட் ஃபேமஸ் படத்தின் டிரைலர் வெளியானது. படத்தில் விஜய் தேவரகொண்டாக்கு ஜோடியாக ராஷி கண்ணா, கேத்தரின் ட்ரேசா, இசபெல் லைட், ஐஸ்வர்யா ராஜேஷ், என நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். படத்தை கிரியேட்டிவ் கமர்ஷியல்ஸ் சார்பாக K.A. வல்லப தயாரிக்கிறார். படத்தை கே. கிராந்தி மாதவ் இயக்குகிறார். இந்நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வருகின்ற காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது.
வால்டர் படம் வெளியாகும் தேதி!
சிபி சத்யராஜ் நீண்ட இடைவேளைக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் வால்டர். படத்தில் சிபி சத்யராஜ் உடன் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டி, மற்றும் நடிகர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தை அன்பு எழுதி இயக்குகிறார். வால்டர் படத்தில் சிபி சத்யராஜ் ஜோடியாக ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கிறார். இந்நிலையில், படம் வருகின்ற மார்ச் மாதம் 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

முக்குத்தி அம்மன் படத்தில் இணைந்த யாஷிகா ஆனந்த், கௌதம் கார்த்திக்!
ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா முதல் முறையாக அம்மன் வேடத்தில் நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன். வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி. கே. கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். படத்தில் மேலும் இரு நடிகர்கள் இணைந்துள்ளார்கள். ஒருவர் நடிகை யாஷிகா ஆனந்த் மற்றொருவர் கௌதம் கார்த்திக்.
தற்போது இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வரும் படக்குழு. தற்போது இவர்கள் படத்தில் இணைந்து உள்ளதை புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளார்கள்.
