தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய்!
2018-ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் அவ்வாண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக கூறப்பட்டது.
ஆனாலும், படத்தின் தயாரிப்பாளர் அதன்பின்பு எந்தவித படத்தையும் தயாரிக்கவில்லை இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தின் நஷ்டமே மீண்டும் தயாரிக்க முடியாத நிலையில் பட தயாரிப்பு நிறுவனம் இருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால், இந்த செய்தி முற்றிலும் தவறு என்று படத்தின் தயாரிப்பாளரான முரளி அவர்கள் தற்போது ஒரு பேட்டியில் கூறி உள்ளார். அவர் என்ன கூறினார் என்றால் மெர்சல் படத்தால் எனக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படவில்லை மெர்சல் படத்திற்கு முன்பு நான் தயாரித்த படங்களில் ஏற்பட்ட நஷ்டத்தால் என்னால் மீண்டும் படத்தை தயாரிக்க முடியவில்லை.
மேலும், கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தளபதி விஜயிடம் நான் பேசினேன் அவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் பண்ணி முடித்தவுடன் மீண்டும் என்னுடன் இணைய இருப்பதாக தகவல் கூறியுள்ளார் என்று முரளிதரன் பேட்டியில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தளபதி விஜய் மீண்டும் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

டிவி தொகுப்பாளினி திவ்யா துரைசாமி அழகிய புகைப்படங்கள்!
இப்போதெல்லாம் நடிகைகளின் புகைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு வண்ணவண்ண போட்டோ ஷூட் களை நடத்தி வரும் டிவி நடிகைகள் மற்றும் டிவி தொகுப்பாளர்கள் இன் புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
அந்த வகையில் பிரபல டிவி தொகுப்பாளினி திவ்யா துரைசாமி லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அந்த புகைப்படங்களை நாம் பார்ப்போம்…











சூர்யாவுக்கு ஜோடியாகும் ராசி கண்ணா!
சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற படத்தை நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. இந்தப்படத்திற்கு அருவா என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ராசி கண்ணா நடிக்க இருப்பதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தளபதி 65 படத்தின் இசையமைப்பாளர் இவரா!
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது அப்படத்தில் இசையமைப்பாளர் தமன் தான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் தமன் தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி இசைமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் இசையில் வெளியான அலவைகுண்ட பரமலோ திரைப்படத்தின் பாடல்கள் இந்திய அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.
