சைலன்ஸ் படத்தின் ட்ரெய்லர் மூன்று மொழிகளில் வெளியாகிறது!
அருந்ததி படத்தின் மூலம் தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்தார் அனுஷ்கா. அதன்பின்பு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இவர் நடித்த படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்றது. சமீபத்தில் இவர் நடித்த பாகுபலி இவருக்கு இந்திய நடிகைகளில் முதன்மை இடத்தைப் பெற்றுத் தந்தது.
இந்நிலையில், இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்கா அதன் பின்பு தனது உடல் எடையை குறைக்க மிகுந்த உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைக்க முடியாத காரணத்தால் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இதனிடையே, தான் மாதவனுக்கு ஜோடியாக சைலன்ஸ் என்ற படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருக்கிறார். தற்போது, இத்திரைப்படம் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் மாதம் 2- தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில். படத்தின் டிரைலரை நாளை மூன்று மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. தமிழில் ஜெயம் ரவியும், தெலுங்கில் ஞானி, இந்தியில் மனோஜ் பாஜ்பாய் வெளியிட உள்ளார்கள். அனுஷ்காவின் சைலன்ஸ் படத்தின் டிரைலரை காண அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்.
It’s time for LADY SUPERSTAR to #BreakTheSilence
Get Ready for #NishabdhamTrailer tomorrow!! pic.twitter.com/yT1xmtyCH2
— Nishabdham Movie (@nishabdham) March 5, 2020
காட்டேரி படத்தின் ரிலீஸ் தேதி!
யாமிருக்க பயமே படத்தை இயக்கிய டிகே இயக்கத்தில் வைபவ், சோனம் பஜ்வா, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் காட்டேரி. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் பேயாக நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை திரில்லர் கலந்து உருவாகியுள்ள காட்டேரி படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இந்நிலையில், காட்டேரி திரைப்படம் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
ஜிப்ஸி படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி திரைப்படம் நாளை (March 6th 2020) உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நட்டாஷா சிங் நடித்துள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார் இவர் இசையில் அனைத்து பாடல்களுமே ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில், ஜிப்ஸி திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஜீ5 கைப்பற்றியுள்ளது. ஒரு பெரும் தொகைக்கு ஜிப்ஸி திரைப்படத்தை ஜி5 நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.