நான் சிரித்தால் படத்தின் வெளியீட்டு தேதி
அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில் சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்கும் படம் நான் சிரித்தால். படத்தில் ஆதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். படத்தின் கதை இளைஞர்கள் காதலில் ஏற்படும் சில மனக்குழப்பங்கள் படத்தின் கதையாக எடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் வருகிற பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று திரைக்கு வரவுள்ளது.
இணையத்தை கலக்கும் ஆத்மிகாவின் ஹாட் புகைப்படங்கள்!
மீசையமுறுக்கு படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஆத்மிகா. இப்படத்தில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்பு தொடர்ச்சியாக நரகாசுரன், காட்டேரி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஆத்மிகா நடத்திய ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவர்தான் ஆத்மிகா என்று ஆச்சரியப்படுகிறார்கள்.