Today Tamil Cinema News 03-02-2020
சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான்!
நேற்று இன்று நாளை பட புகழ் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் அயலான். படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸுடன் இணைந்து 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை ஏ. ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ உடன் வெளியிட்டுள்ளார்.
Here is the title reveal of the movie #Ayalaan@siva_kartikeyan@Ravikumar_Dir @24AMStudios@kjr_studios#அயலான் pic.twitter.com/wNqVsR0BfP
— A.R.Rahman (@arrahman) February 3, 2020
கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் லாஸ்லியா!
பிக் பாஸ் தமிழ் 3 மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தற்போது ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் “பிரண்ட்ஷிப் “படத்தில் ஹர்பஜன் சிங்க்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை ஷேண்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்குகிறார். லாஸ்லியா படத்தில் இணைந்ததை படக்குழு போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.
அப்ப எமதர்மன் இப்ப முருகன் தொடர்ந்து இந்து கடவுள்களை கலாய்க்கும் யோகி பாபு!
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. இவர் நடித்தாலே அப்படம் மாபெரும் வெற்றி பெற்றுவிடும் என்று சொல்லுமளவிற்கு இவரின் செல்வாக்கு உள்ளது. சமீபகாலமாக ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் யோகிபாபு கடைசியாக தர்மபிரபு என்ற படத்தில் எமதர்மன் ஆக நடித்திருந்தார். அப்படத்தில் எமன் சிவனை கலாய்க்கும் காட்சிகள் அதிகம் இருந்தது. இந்தக் காட்சிகளுக்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்நிலையில், யோகி பாபு ஆர். ஏ. விஜய முருகன் இயக்கத்தில் ‘காக்டெய்ல்’ என்ற படத்தில் முன்னணீ கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை அஞ்சலி மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய கதாப்பத்திரங்களி நடிக்கின்றனர். இதில் காக்டெய்ல் பறவை ஒன்று நடிக்கிறது. மாறுபட்ட த்ரில்லர் கதையைக் கொண்ட இப்படத்தை பி.ஜி. முத்தியா தயாரிக்கிறார். இப்படத்துக்கு சாஇ பாஸ்கர் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியானது. இப்படத்தில் யோகிபாபு முருகனாக நடித்திருப்பது போல் இந்த புகைப்படம் தெரிகிறது. அவ்வாறு இருந்தால் இந்தப் படத்திற்கும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்க காத்திருக்கும் என்று தெரிகிறது.
ஃபிலிம்ஃபேர் விருது கவர்ச்சி உடையணிந்து வந்த விஜய் நடிகை!
பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன்பின்பு தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஃபிலிம்ஃபேர் விருது விழா நிகழ்ச்சிக்கு படு கவர்ச்சியான உடை அணிந்து சென்றுள்ளார் மாளவிகா மோகன். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.