Today Tamil Cinema News 02-12-2019
போலீஸ் அவதாரத்தில் வரலட்சுமி சரத்குமார்!
தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்கள் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. தற்போது அந்த வரிசையில் வரலட்சுமியும் இணைந்துள்ளார்.
அறிமுக இயக்குனர் சந்தான மூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துவரும் படத்துக்கு டேனி என்று பெயர் வைத்துள்ளார்கள். டேனி படத்தை பி. ஜி. மீடியா ஒர்க்ஸ் சார்பாக பிஜி முத்தையா தயாரிக்கிறார். சந்தோஷ் தயாநிதி & சாய்பாஸ்கர் இணைந்து டேனி படத்திற்கு இசை அமைக்கிறார்கள்.
கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய நமிதா!
எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நமீதா. அதன் பின்பு அஜீத் குமாருடன் இணைந்து பில்லா விஜயுடன் இணைந்து அழகிய தமிழ் மகன், சரத்குமாருடன் இணைந்து ஏய் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.
அதன் பின்பு நமிதாவுக்கு புதிய பட வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்பு விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் சீசன் 1 பகுதியில் கலந்துகொண்டு தோல்வியை தழுவினார். பின்பு தனது நீண்டநாள் காதலரை மணமுடித்தார்.
இந்நிலையில், நமீதா மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையில் தற்போது ஒரு ஹாட் போட்டோஷூட் நடத்தியுள்ளார். நமிதாவின் இந்த ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இன்னொரு தோல்வி படத்தை கொடுத்த தனுஷ்!
வடசென்னை, அசுரன் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்த தனுஷ், கடந்த வெள்ளியன்று வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. வெளியான முதல் நாள் முதலே படத்தின் வசூல் மிகவும் குறைவாகவே இருந்தது.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமை அனைத்து திரையரங்குகளிலும் பகல் காட்சியிலேயே 30 முதல் 40 சதவீத ரசிகர்களே என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை பார்க்க வந்ததாக திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதே நிலை நீடித்தால் நிச்சயம் என்னை நோக்கி பாயும் தோட்டா தனுஷுக்கு ஒரு தோல்விப் படமாகவே அமைய வாய்ப்புள்ளது.