மீண்டும் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில் தனுஷ்!
அசுரன் வெற்றிக்கு பிறகு துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் பட்டாஸ் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. அந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் டி40 படமும் திரைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில், யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் 4வது முறையாக தனுசை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் கதையை நடிகர் தனுஷே எழுதியுள்ளாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
பொன்னியின் செல்வன் டைட்டில் லுக்கை வெளியிட்ட மணிரத்னம்!
வரலாற்று சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் மணிரத்தினத்தின் இயக்கத்தில் படமாகிறது. இந்தப் படத்தை லைகா மற்றும் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்திற்கு ஜெயமோகன் வசனங்கள் எழுதியுள்ளார். திரைக்கதை மற்றும் இயக்கத்தை மணிரத்னம் செய்கிறார். தற்போது, வெளியாகியுள்ள டைட்டில் லுக்கில் படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
Are you ready to witness the beginning of the golden era on the big screen? ?⚔ #PonniyinSelvan
Shooting in progress ?#Kalki #ManiRatnam @LycaProductions @arrahman #RaviVarman @sreekar_prasad #ThottaTharani #Jeyamohan @ShamKaushal @ekalakhani @BrindhaGopal1 @bagapath pic.twitter.com/KNaQTX15Rb— Madras Talkies (@MadrasTalkies_) January 2, 2020
நானும் நடிகைதான் என போட்டோ ஷூட் நடத்திய லாஸ்லியா
பிக் பாஸ் சீசன் 3 இல் கவின் உடன் காதல் புரிந்து இறுதியில் போட்டியாளர்களில் நால்வரில் ஒருவராக இறுதி வரை சென்ற லாஸ்லியா தற்போது தனது சொந்த நாடான இலங்கையில் தங்கி வருகிறார். இந்நிலையில், முதல் முறையாக ஒரு போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். லாஸ்லியா தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிறது.