ஒருவழியாக வெளியாகும் ஆதித்யா வர்மா!
துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்யா வர்மா படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தில் துருவ் விக்ரம் டாக்டராக நடிக்கிறார். இப்படம் தெலுங்கு ரீமேக் ஆகும். தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் பதிப்பு தான் ஆதித்யா வர்மா.
இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆதித்யா வர்மா திரைப்படம் துருவ் விக்ரம் மாபெரும் வெற்றியைத் தரும் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் வெளியீட்டு தேதி வருகின்ற நவம்பர் மாதம் 8-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இப்படத்தில் பனிதா சந்து, துருவ் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார்.
ஆக்சன் படத்தின் முதல் பாடல் வெளியாகிறது!
சுந்தர் சி டைரக்ஷனில் விஷால் நடிக்கும் ஆக்சன் படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தில் விஷால் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தமன்னா சிபிஐ ஆக நடிக்கிறார். இப்படத்தின் அனைத்து காட்சிகளும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது.
ஆக்சன் படத்தில் அனைத்து பாடல்களுக்கும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார்.
இவர் இசையில் ‘நீ சிரிச்சாலும்’ பாடல் வருகின்ற செவ்வாய்க்கிழமை 22-ஆம் தேதி வெளியாகிறது.
Action – Nee Sirichalum Song
10 லட்சம் பார்வையாளர்களை கடந்த ஓ மை கடவுளே பட டீசர்!
அசோக்செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் ஓ மை கடவுலே படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. காதல், திருமணம் மையமாக வைத்து உருவாகியுள்ள ஓ மை கடவுலே படம் வெளியீட்டிற்காக தயாராக உள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தெய்வமகள் நாடகம் மூலம் பிரபலமான வாணி போஜன் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.