7 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காட்டு பயலே’ பாடல்

‘சூரரைப் போற்று’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காட்டு பயலே’ என்ற பாடல் 7 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

the-song-kattu-payale-which-lasted-7-million-viewers
the song kattu payale which lasted 7 million viewers

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

ALSO READ | ‘லிப்ட்’ படத்திற்கு டப்பிங் பேசி முடித்த கவின்

‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இவர் இசையில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள பாடலாக அமைந்துள்ளது.

ALSO READ | 5 கோடி சம்பளம் வாங்கும் விஜய் பட கதாநாயகி

குறிப்பாக ‘காட்டு பயலே‘ என்ற பாடல் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தை கலக்கி வருகிறது. இப்பாடலை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார். எளிமையான வரிகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும் வகையில் இருப்பதால் இந்த பாடலை அதிக நபர்கள் கேட்டு ரசித்து வருகிறார்கள். ‘சூரரைப் போற்று’ திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ALSO WATCH | Kaattu Payale Song Lyric Video | Soorarai Pottru Movie Songs

Exit mobile version