தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்துச்செல்லும் முயற்சியில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தொடர்ந்து மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகிறார்கள்.
ALSO READ | மீண்டும் தனுஷுக்கு ஜோடியாகும் ஹன்சிகா மோத்வானி
குறிப்பாக சூர்யா நடிப்பில் வெளியான ‘மாற்றான்’, தனுஷ் நடிப்பில் வெளியான ‘அனேகன்’, தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ போன்ற படங்கள் அனைத்துமே மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களாக இன்றுவரை கருதப்படுகிறது.

அந்தவகையில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தல அஜீத் குமாரை வைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ALSO READ | பிகினி உடையில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன்
இந்த செய்தியை கேட்ட அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் #தல61 என்ற ஹாஷ்டேக் பதிவிட்டு தங்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.