நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள மிருகா திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
Mirugaa Teaser Out now: ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லட்சுமி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படமான மிருகம் படத்தின் டீசர் இன்று நடிகர் தனுஷ் அவர்களால் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
மிருகா படத்தை இயக்குனர் ஜே.பார்த்திபன் இயக்கியுள்ளார். திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவை எம்.பி. பன்னீர்செல்வம் செய்துள்ளார்.
இசை அருள்தேவ் மற்றும் சுதர்சன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதை ஜாகுவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பி.வினோத் ஜெயின் தயாரித்துள்ளார்.