தமிழில்

ராணுவ அதிகாரியாக நடிக்கும் சூர்யா!

இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் ராணுவ உயர் அதிகாரியாக சூர்யா நடிக்கிறார்.

தமிழ் திரையுலகின் வித்தியாசமான கதைகளில் கதாநாயனாக நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என் ஜி கே என்ற படத்தில் அரசியல்வாதியாக நடித்து வருகிறார். என் ஜி கே படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
என் ஜி கே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். இந்நிலையில் இப்படம் வருகிற மே மாதம் 1ஆம் தேதி வெளியாகிறது.

இதையடுத்து கே வி ஆனந்த் இயக்கத்தில் மோகன்லால், ஆர்யாவுடன் ஒரு புது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு காப்பான் என பெயர் வைத்துள்ளார்கள். காப்பான் படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். காப்பான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயீஷா நடிக்கிறார்.

இந்நிலையில், சூர்யா வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு ராணுவ வேடத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் இம்முறை ஒரு படி மேலே போய் ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கிறாராம். இப்படத்தை இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படம் ஒரு ராணுவ உயர் அதிகாரியின் வாழ்க்கை வரலாற்றை தழுவியதாக இருக்கும் என்று படக்குழு செய்தி வெளியிட்டு உள்ளது.

இப்படம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி கிண்டியில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பூஜையுடன் தொடங்குகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.