காப்பான் படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.
இப்படத்திற்கு ஜீ.வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இவர் இசையில் அனைத்து பாடல்களும் கேட்கும்படி உள்ளது. குறிப்பாக “மாரா தீம்” ரசிகர்களை திரும்பத் திரும்ப கேட்க வைக்கிறது.
இந்நிலையில், சூரரைப் போற்று திரைப்படம் உலக அளவில் சுமார் 100 கோடிக்கு மேல் வியாபாரமாகி உள்ளதாக படத்தை தயாரித்துள்ள தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தெரிவித்துள்ளார்கள்.
ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.