தமிழில்

சூரரைப் போற்று – இது சூர்யாவின் புதிய படத்தின் தலைப்பு

சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கு சூரரைப் போற்று என்ற பெயர் வைத்துள்ளார்கள்.

என் ஜி கே, காப்பான் படங்களை தொடர்ந்து சூர்யா தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சூரரைப் போற்று என்ற பெயர் வைத்துள்ளார்கள். சூரரைப் போற்று படத்தை சுதா கோங்கரா இயக்குகிறார்.

சூரரைப் போற்று படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

SooraraiPottru

அண்மையில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்நிலையில், ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸாக இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். சூரரைப் போற்று என்பதுதான் இப்படத்தின் தலைப்பு.

இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களில் நாயகியாக நடித்தவர். மேலும் ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.