அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் படம் மஹா. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. காவி உடையில், சுருட்டு பிடிப்பது போல் ஹன்சிகா இருந்ததே இந்த சர்ச்சைக்கு காரணம்.
இதை தொடர்ந்து, இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. குறிப்பாக இந்த படத்தில், ஹன்சிகா காதலித்து பிரேக் அப் செய்த நடிகர் சிம்பு சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட சிம்பு, ஹன்சிகா மீது படுத்து கொண்டிருப்பது போல், ரொமான்டிக் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘மஹா’ படத்தில் நடித்துள்ள சிம்புவின் லுக்கை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளார். பைலட் வேடத்தில் நடித்து மிரட்டியுள்ளார் சிம்பு. பார்பதற்க்கே இந்த போஸ்ற் வேற லெவலில் உள்ளது.