சந்தானம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் திரையில் தோன்றினால் ரசிகர்கள் மனதில் உற்சாகம் பொங்கி எழும் அந்த அளவிற்கு சந்தானத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் இருக்கிறது.
சமீபகாலமாக நகைச்சுவை கதாபாத்திரங்களை தவிர்த்து கதாநாயகன் கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார் சந்தானம்.
இவர் நடிப்பில் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பிஸ்கோத்‘. படத்தில் பல தோற்றங்களில் சந்தானம் வருவது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் இன்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் சந்தானம் ராஜா வேடத்தில் மேஜையில் அமர்ந்து இருப்பது போல் அந்த புகைப்படம் அமைந்துள்ளது.
Also Read | ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் பிரியாமணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
தற்போது சந்தானத்தின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் பார்த்து ரசித்து வருகிறார்கள். ‘பிஸ்கோத்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.