தமிழ் சினிமா செய்திகள்

எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் நகைச்சுவை படத்தின் டீசர் வெளியானது

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மான்ஸ்டர் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியானது.

தமிழ் சினிமாவில் புதுமையான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கி நடிக்கும் நடிகர் என்றால் அது வேறு யாருமில்லை நம் எஸ் ஜே சூர்யா. இவர் இயக்கிய வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே, போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் கண்டிராத கதைக்களம்.

அதன் பின்பு இவர் மற்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார் சமீபத்தில் இவர் தளபதி விஜய்க்கு வில்லனாக மெர்சல் படத்திலும் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுக்கு வில்லனாக ஸ்பைடர் என்ற படத்திலும் நடித்தார். சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அறிமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் மான்ஸ்டர் என்கின்ற நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ் ஜே சூர்யா ஜோடியாக பிரியா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரம் கருணாகரன் நடிக்கிறார்.

இந்நிலையில் மான்ஸ்டர் படத்தின் டீஸரை தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா வெளியிட்டுள்ளார்

டீசரை பார்க்க: MonsterTeaser

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.